குந்தவை எனும் டென்னிஸ் வீராங்கனையைச் சுற்றியே கதை நகர்கிறது. அனந்த நாராயணன், புனிதா, பாரிஜாதம், ராமன் நாயர், தங்கம்மா ஆகியோர் கவனம் ஈர்க்கிறார்கள். ஒரே மகளின் மீது தீராத அன்புகொண்ட பெற்றோர் சந்திக்கும் சிக்கல்களை கண்முன்னே காட்சிப்படுத்தியிருக்கிறார் படைப்பாளி. இதுதான் உண்மையாக இருக்குமோ என்று நாம் நம்பும்போது அங்கேயொரு திருப்பம். யார் நல்லவர் யார் தீயவர் என்பதை உறுதிசெய்யவே முடியாதபடி கதை நகருகிற...