"சற்றே அமானுஷ்யம் கலந்த ஒரு ஃபேமிலி த்ரில்லர் இந்த நாவல். மொத்தம் இரண்டு ட்ராக்குகள். ஒரு ட்ராக்கில் ஒரு அழகான குடும்பக்கதை. இரண்டாவது ட்ராக்கில் ஒரு அமானுஷ்ய கதை.
இந்த அமானுஷ்ய கதையில் வரும் சிவகாமியின் நடவடிக்கைகள் திகிலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
சிவகாமியின் ஒரே மகள் இதயா. சிவகாமியின் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் மகள் இதயாவுக்கு திருமணத்தை நடத்த முடிவு செய்து வரன் பார்க்கிறான...