தன் பெற்றொர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, தனது பூரண சம்மதத்தைத் தந்துதான் சொர்ணா சரவணனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்றாலும். ஏனோ அவனை உடலளவில் அண்டவிடாது முரண்டு பிடிக்கிறாள். முன்கோபியாயிருந்தாலும், புதுப் பெண்டாட்டியின் மீது காதல் கிறக்கத்தில் இருக்கும் சரவணன், அவளைச் சரிசெய்ய உளவியல் நிபுணரிடம் அழைத்துச் செல்கிறான். சொர்ணாவின் சிறு வயதில், கிராமத்தில் நடந்த ஒரு பாலியல் அத்துமீறல் சம்பவ...