'இலக்கிய முன்னோடிகள்' என்ற இந்நூல் 31 இலக்கியவாதிகளைப் பற்றிய தனித்தனிக் கட்டுரைகளின் தொகுப்பு. கு.அழகிரிசாமி எழுதிய 'நான் கண்ட எழுத்தாளர்கள், அறிஞர் வ.ரா. எழுதிய 'தமிழ்ப் பெரியார்கள்', வையாபுரிப்பிள்ளை எழுதிய'தமிழ்ச் சுடர்மணிகள்'என்று இதே பாணியில் அமைந்த சில நூல்கள் முன்னரே தமிழில் உண்டு. அந்த நூல்களையெல்லாம் படித்து அனுபவித்து வியந்த நான், இப்படியொரு நூலை எழுதவேண்டும் என்று தீவிரமாக எண்ணி வந்தது...