இராமர் இந்து இதிகாசங்களின்படி, இந்துக் கடவுள் விஷ்ணுவின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர். மற்றவர்கள் இலக்குவன், பரதன், சத்துருகனன் ஆவர். பொதுவாக இராமர் 12,00,000 ஆண்டுகளுக்கு முன்னர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று குறிப்பிடப்படுகின்றார். விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ராமர் ஏக பத்தினி விரதம் கடை பிடித்தார். தந்தை சொல்...