வெவ்வேறு மதங்களைச் சார்ந்த கணவனும் மனைவியும் வழிபாட்டிற்காக இரு வீடுகளிலும் தடை சொல்லாத ஒரே கோயிலுக்கு இணைந்து வர விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஓர் ஆன்மீகக் கடவுளும் ஆன்மீகக் கோயிலும் இன்று அவசியமாகிறது. ஸ்ரீஅன்னை நெறி ஜாதி மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாதது. ஸ்ரீஅன்னையும் அரவிந்தரும் போதித்த நெறி மதங்கடந்த ஆன்மீக நெறி. அவர்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவான கடவுளர்கள். அரவிந்தர் மையங்கள் அனைத்து மக...