நல்ல சம்பாத்தியத்துடன் வாழும் 34 வயதான, திருமணமாகாத அந்த முதிர் இளைஞனுக்கு, 60 வயதான முதியவர் ஒரு ரயில் பயணத்தில் நட்பாகிறார். நட்பு நெருக்கமாகிறது. பெரியவரது இளம் பெண் பிரியா மீது இவனுக்குக் காதல் வருகிறது. ஆனால் இருவருக்குமிடையே இருந்த வயது வித்தியாசம் மிக அதிகம். பெரியவர். தம் மகளைக் கட்டித்தர சம்மதிப்பாரா? பிரியா, அன்பின் வடிவமாய் இருந்தாள். அவளைச் சுற்றியிருந்த அன்பின் அலைகள், குழந்தைகள் முதல...