"ரொம்ப காலமாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு அந்த ஆசாமிக்குக் கடைசியில் வந்தே விட்டது. ஆனாலும் என்ன? வேலை வடக்கிந்தியாவில் எங்கோ ஒரு தொலை தூர ஊரில் உள்ள பிராஜக்ட் ஸைட்டில். வீட்டில் மனைவிக்கோ இஷ்டமேயில்லை. பாஷை தெரியாத அத்துவான ஊரில், போய் வாழ்வதில் என்ன சுவாரசியம் இருக்கிறது? ஆனால் கூடவே இருக்கும் வயதான பெற்றோர்களுக்கோ எந்த மறுப்பும் இல்லை. மனைவிக்குப் பிடிக்காத இடமாற்றலிலிருந்து தப்பிப்பது எப்பட...