"துரோகத்தில் கூட ஒரு கிராம் பத்து கிராம் என்று அளவு உண்டா ? என்று வாசகர்கள் யோசிக்கலாம். ஒரு பெரிய பாறையை உடைப்பதற்கு சிறிய உளி ஒன்று போதும். அதேபோல் ஒரு பெரிய அணைக்கட்டு உடைவதற்கு ஒரு சிறிய விரிசலும் ஒரு குடம் தூய்மையான பால் ஒரு துளி விஷத்தால் விஷமாக மாறவும் போதுமானது. அதேபோல் நல்ல நட்பும், இனிய உறவுகளும் முறிந்து போக ஒரு சிறிய துரோகம் போதும்.
இந்த நாவலில் ஒரு கிராம் துரோகம் என்ன என்பது நாவலின் கட...