"சித்ரா ஆபீஸ் வேலைக்குப் போகிற ஒரு குடும்பப்பெண். கணவன் முரளி பலவித கெட்ட
பழக்கங்களுக்கு அடிமையானவன். சரிவர வேலைக்குப் போகாமல் ஏதாவது காரணம்
சொல்லிக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறான்.
அன்றைய தினம் ஆபீஸீக்குப் போகும் சித்ராவுக்கு எதிர்பாராத பிரச்சினை ஏற்படுகிறது.
அவளுடைய கம்பெனியின் மானேஜிங் டைரக்டர் பத்மநாபன் அவளை தன்னுடைய அறைக்கு வரவழைத்து ஒரு சிறிய சூட்கேஸை அவளிடம் கொடுத்து அவளுடைய வீட்டில் பத்திரமாய் வ...