"இது சாத்தானால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு கடவுளின் கதை.
நாம் சொற்களில் வாழ்கிறோம். இந்நாவலின் நாயகன் இசையில் வாழ்கிறான். நாம் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்குகிறோம். அவன் வாழ்க்கை பிரபஞ்ச விதி எதற்குள்ளும் பொருந்தாமல் புடைத்து நிற்கிறது. அதனாலேயே அது வண்ணங்களோ வாசனையோ இல்லாத ஒன்றாகிறது. காலத்தை வெல்வதற்கு அவனுக்குள்ள வேட்கையும் அவனைத் தோற்கடிக்க விதி மேற்கொள்ளும் வேட்டையும் முட்டி மோதும் கணங்களில...