"கண்ணன் கதைகள்" என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்.