"அதிக முதலீடு இன்றிப் பெரும் செல்வம் ஈட்டிய 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான Dropbox இன் உத்வேகமூட்டும் வெற்றிக் கதை இது . இப்படியொரு 'ஸ்டார்ட் அப்பை' தொடங்குவதற்கு அதிக முதலீடு தேவைப்படாது, பெரிய அலுவலகம் தேவைப்படாது, பணியாளர்கள் என்று பெரிதாக யாரும் தேவைப்படமாட்டார்கள், கோட்-சூட்டோ நுனிநாக்கு ஆங்கிலமோகூட அவசியமில்லை. அட, புதுமையாக இருக்கிறதே என்று மற்றவர்களை வியக்க வைக்கும் ஒரு யோசனை, அந்த யோசனைய...