சர்வவல்லமை பொருந்திய ரோம சாம்ராஜ்ஜியத்தின் முதன்மைநாயகர்கள் ஜுலியஸ் ஸீஸரையும், மார்க் ஆன்ட்டனியையும் தன்சுண்டுவிரலில் சுழற்றியவர் கிளியோபாட்ரா. இதைத் தேசிய அவமானமாக நினைத்த ரோமன் வரலாற்று எழுத்தாளர்கள், உடல் கவர்ச்சியை மூலதனமாக வைத்துப் பதவியாட்டம் ஆடியவராக அவரைச் சித்தரித்தார்கள். காலம்காலமாகத் தொடரும் இந்தப் பொது ஜனபிம்பத்தை ஆதார பூர்வமாக எஸ். எல். வி. மூர்த்தி உடைத்தெறிகிறார். அவர் நிலைநிறுத்து...