கௌதம புத்தரின் நேரடிச் சீடர்கள் பட்டியலில் போதி தர்மரின் பெயர் இல்லை. புத்தர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவரும் அல்ல. காரணம், இருவருக்கும் இடையேயான கால இடைவெளி சுமார் ஆயிரம் ஆண்டுகள். என்றாலும், போதி தர்மரை இரண்டாவது புத்தர் என்று கொண்டாடுகிறார்கள்; ஆராதிக்கிறார்கள்; பின்பற்றுகிறார்கள். எனில், யார் இந்த போதி தர்மர்? போதி தர்மரைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகின்ற அத்தனைபேரும் எழுப்பும் முதல் மற்றும...