மகான்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதற்கு அசாதாரணத் துணிவு வேண்டும். அதுவும் அண்மையில் வாழ்ந்திருந்தவரைப் பற்றி எழுதுவதென்றால் அதிக விழிப்புடன் இருக்கவேண்டும். எங்கேனும் ஓரிடத்தில் இடறிவிட்டால் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மகானின் சீடர்களிடமும் அன்பர்களிடமும் அகப்பட்டுக் கொள்ளும்படியாகி விடும்.
அதுவும் இது மனித நிலை கடந்த அதிமனிதரைப் பற்றிய வரலாறு. அவரது கொள்கையும் கருத்துகளும் புத்தம் புதிய...